இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ
இலங்கையின் அரசியலில் இந்திய றோவின் ஆதிக்கம் மிக மிக அதிகம் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
ஒரு ஒப்பந்தத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக கூட்டமைப்பின் தமிழ் தேசிய பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போதே தெரிவித்துள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையுடன் கலந்தாலோசித்து தமிழர்களுக்கு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா இதுவரை தயாராக இல்லை எனவும் ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஏதோ ஒரு வகையில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உந்து சக்தியுடன் இந்தியா செயற்படுவதாகவும் அவர் தெரித்துள்ளார்.
மேலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் இந்தியா ஏற்படுத்திய குழப்பத்தை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
