அரசாங்க சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களினதும் சொத்துக்களை ஆராய்ந்து அவற்றை உரிய வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
அரச சொத்து முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்
1,600 இற்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிறுவனங்களில் சுமார் 91,000 வாகனங்கள் இருப்பதாகவும் நிலையான சொத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |