தேர்தல் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவு
ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பணத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சிற்கு உத்தரவு விடுத்துள்ளார்.
உரிய பணத்தை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
தேர்தல் செலவு
இதில் தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக மதிப்பிடப்பட்ட பணம் தொடர்பில் 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
