பொலிஸ் மா அதிபரின் பதவி தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடக் கோரி, கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tannakoon) செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Cardinal Malcolm Ranjith) ஆண்டகை உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உயர் நீதிமன்றம் குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |