கல்முனையில் கண்டுப்பிடிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி
கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக கை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில் அங்கு விளையாட்டில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்டு குறித்த துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனி நாட்டு தயாரிப்பு
மீட்க்கப்பட்ட துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்குநிலையில் காணப்படுவதுடன் ஜேர்மனி நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்ட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
