மக்கள் மீது எவ்வித கரிசனையும் கொள்ளாது அரசாங்கம் உள்ளது : வசந்த முதலிகே தெரிவிப்பு
மக்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்ற வேளையில் இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்வதில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “1983 ஆம் ஆண்டு கறுப்பு உடை இன கலவரம் கொழும்பில் இடம் பெற்ற பொழுது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இனங்களுக்கு இடையிலான பிரச்சினை
இன்று 41 வருடங்கள் கடந்துள்ளன. மக்களுக்கான தீர்வு இந்த அரசாங்கத்தினால் சரி, சிங்கள அரசியல்வாதிகளினாலோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
மாறாக தமிழ் மக்கள் ஒடுக்கி ஆளப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.
குளிர் காய்ந்த அரசியல்வாதிகள்
மாறாக இனம் மதம் மொழி என்ற பாகுபாடுகளை மக்களுக்குள் திணித்து அதன் மூலம் அரசியல் இவாபத்தையே இந்த அரசியல்வாதிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இனங்களைப் பிரித்து மதங்களைப் பிரித்து அதனுடாக குளிர் காய்ந்த அரசியல்வாதிகள் தங்கள் பொக்கட்டுகளை நிரப்பவே இந்த நாடாளுமன்றத்தை அலங்கரித்தனர்.
சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் பல வருடங்களாக இவர்கள் இழுத்தடிப்பு செய்தனர்” என்றும் வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |