இனப்படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய அமைச்சரை மேற்கோள் காட்டி சபையை அதிரவைத்த சிறீதரன்
41 வருடங்கள் கடந்து நேற்று தான் இந்த சபையிலே ஒரு அமைச்சரால் நடந்த இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோருகின்றோம் என்று எழுந்தமானமாக சொல்லப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (24.07.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், கொழும்பிலே 41 வருடங்கள் முன்னர் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக ஜூலை படுகொலை கருதப்படுகிறது.
இதன்போது கொழும்பிலும் மலையகத்திலும் இருக்கின்ற பல்வேறுபட்ட இடங்களிலே பாரியளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் மீது அந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
ஆகவே மிகப்பெரிய வரலாறுகளை கொண்ட மாதமாக இம்மாதம் இருக்கிறது. சர்வதேச குற்றங்களை விசாரிக்கின்ற பன்னாட்டு அமையம் கூட இது ஒரு இன படுகொலை என அந்த நேரத்திலே வெளிப்படுத்தி இருந்தது.
நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்டவர்கள் அல்ல ஆயதங்கள் எங்கள் மீது திணிக்ககப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |