கடற்படையினர் சென்ற வாகனம் விபத்து: மூவர் படுகாயம் (VIDEO)
திருகோணமலை ஹபறன பிரதான வீதியின் கித்துல் ஊற்று என்னுமிடத்தில்
கடற்படையினர் சென்ற கெப் வாகனம் டிப்பருடன் மோதியதில் மூன்று கடற்படை
வீரர்கள் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கான காரணம்
கடற்படை கெப் வாகானம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற வேளையில் கந்தளாய் கித்துல் ஊற்று என்னுமிடத்தில் முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணை
காயமடைந்த கடற்படை வீரர்கள் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
லண்டனில் கொடூர தாக்குதலில் உயிரிழந்த பெண் |





ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
