லண்டனில் கொடூர தாக்குதலில் உயிரிழந்த பெண்
கிழக்கு லண்டனில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்டப்பட்டவர் 36 வயது ஜாரா அலீனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உள்ளூர்வாசியான அலீனா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிரான்புரூக் சாலையில், இல்ஃபோர்டில் உள்ள கேண்ட்ஸ் ஹில் ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, "கொடூரமான தாக்குதலுக்கு" பலியானார்.
அவர் "அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் தாக்குதலுக்கு பலியானவர்" என்று நம்புவதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02:45 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தின் போது மருத்துவர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அலீனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு எந்த ஆயுதமும் பயன்படுத்தவில்லை
"உள்ளூரில் வசித்து வந்த ஜாரா, கேண்ட்ஸ் ஹில் ஸ்டேஷன் திசையில் கிரான்புரூக் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்டார் என தலைமை காவலர் ஸ்டூவர்ட் பெல் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
"அவளுடைய குடும்பத்தினர் இதை அறிந்திருக்கிறார்கள், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் போது அவர்கள் அழைக்கப்படுவார்கள். தாக்குதலுக்கு எந்த ஆயுதமும் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அலீனாவின் தலையில் ஆபத்தான காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனையில் அலீனா "பல தீவிர காயங்களுக்கு ஆளாகியிருந்தது" தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.