தெற்கு கடலில் தீப்பற்றி எரிந்த படகு: விரைந்து செயற்பட்ட கடற்படையினர்
இலங்கைக்கு தெற்கே சுமார் 58 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு தீப்பிடித்ததில் அதிலிருந்த 7 கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே குறித்த கடற்றொழிலாளர்கள் மீட்டுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போதே குறித்த 7 மீனவர்களும் இன்று காலை சனிக்கிழமை (12.08.2023) மீட்டுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பிடித்த படகு
இந்நிலையில் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கடற்றொழிலாளர்கள் ருஹுனு குமாரி 6 எனும் மீன்பிடி இழுவை படகு மூலம் கடந்த (08.08.2023) ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு மேற்கு கடற்பகுதியின், காலி கடற் பகுதியில் இருந்து சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படகு தீப்பிடித்துள்ளது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு முதலுதவி
அதனைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த கடற்படையினர் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தீப்பிடித்த படகிலிருந்து பத்திரமாக இடமாற்றம் செய்து, காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
