இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் கனவில் பிரபல அரசியல்வாதி
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் தான் எனவும், சரியான வாய்ப்பு கிடைத்தால் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநயாக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் ஆளுநராக பணியாற்ற தேவையான திறன்கள் மற்றும் அனுபவம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தனது தகுதிக்கு மற்றொரு காரணியாக எந்த மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதி
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய நவீன் திசாநாயக்க இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“ஜனாதிபதியாகும் கனவுகள் பலருக்கு உள்ளன. கனவை எவ்வாறு நனவாக்குவது என்பது வேறு கதை.
2019ஆம் ஆடு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அநுரகுமாரவுக்கு அத்தகைய கனவு இருந்திருக்க வேண்டும். ஆனால் அநுரகுமார ஜனாதிபதியாக வருவார் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை.
பொருளாதாரத் திட்டம்
எனினும் எனது தகுதிகளின் அடிப்படையில் இன்று மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறப்பாகச் சேவை செய்ய முடியும். அரசாங்கத்திற்கு ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் மட்டுமே உள்ளது.
அரசாங்கம் குறிப்பாக மோசடி, ஊழல் மற்றும் திருட்டுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், குறிப்பாக வாழ்க்கைப் பிரச்சினை, பொருட்களின் விலை உயர்வு, வேலைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கம் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை என்று நான் எப்போதும் கூறுவேன்.
இது ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்ளும். ஏனெனில் ஒரு பொருளாதாரத் திட்டம் இல்லாமல், ஒரு நாட்டை முழக்கங்களால் மட்டும் வழிநடத்த முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா



