அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்றைய தினம் முதல் பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகள் இருக்கை பட்டிகள் அணிந்து செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கை பயயணிகளும் இருக்கை பட்டிகளை அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை
வீதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நடைமுறையை மீறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
