225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பு! சிக்கலில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி
225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி மீது வழக்குத் தொடரப்பட உள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.
அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தாம்புலாகல மற்றும் மாடல் அழகி பியூமி ஹன்சமாலி ஆகியோர் சுமார் 42 கோடி ரூபா வரித் தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செலுத்தப்படாத வரிக்கான அபராதம்
இவ்வாறு செலுத்தப்படாத வரிக்கான அபராதம் மற்றும் வட்டி என்பனவற்றுடன் வரித் தொகையை அறவீடு செய்யும் நோக்கில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தாம்புகல 194 மில்லியன் ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலி 225 மில்லியன் ரூபா வரியை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஜயசிங்க ஆராச்சிகே ஹேமந்த எனப்படும் பதல மஹத்தாய என்வரின் கணக்கில் 175 கோடி ரூபா பணம் புழங்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்த விசாரணைப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
