பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை
புதிய இணைப்பு
ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கார் விபத்து இடம்பெற்றதன் பின்னர், வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
முதலாம் இணைப்பு
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று (13) காலை கைது செய்யப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட நபர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெலிக்கடை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
