பாகிஸ்தானில் இயற்கை பேரழிவு: 39 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் (Pakistan) தென்மேற்கு பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக குறைந்தது 39 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் சிலர் விவசாயிகள் எனவும் அவர்கள் கோதுமை அறுவடை செய்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் (Punjab) மாநிலம் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளதுடன் அந்த மாநிலத்தில் 3 நாட்களில் 21 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் காயம்
கடந்த 2022ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஒரு மிகப் பெரிய வெள்ள அனர்த்தத்தை சந்தித்திருந்தது.
இதில், 1700இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் கனமழை பெய்து வருவதால், பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மண்சரிவு அபாயத்தை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |