நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குற்றவியல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 616 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனை நடவடிக்கைகளின் போது 25,573 நபர்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் நேரடியாக பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 265 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 161 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 72 பேரையும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 18 பேரையும் கைது செய்துள்ளதுடன் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 3567 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




