நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதும் சுமார் 600 மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார துறை ஊழியர்களை, வழமையான பணிகளுக்கு திரும்ப அழைப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணி விலகல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை, பெண்களுக்கான காஸ்டல் ஸ்ட்ரீட் மருத்துவமனை மற்றும் அபேக்ஷா மருத்துவமனையில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ரத்னபிரிய குறிப்பிட்டார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam