இலங்கையின் தேசியக்கொள்கை புத்தரின் போதனைகளால் வடிவமைப்பு: செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் தேசியக் கொள்கை கட்டமைப்பானது சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு தொடர்பான புத்த பெருமானின் போதனைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது பெரும் மதிப்பை அளிப்பதாகவும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்(G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
நீலப் பசுமைப் பொருளாதாரம் என்ற கருத்தின் கீழ் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதே அரசாங்கக் கொள்கையின் அடித்தளமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 21ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஆற்றிய சிறப்புரையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் மதிய நேர செய்திகளின் தொகுப்பு,