தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோருக்கு வெளியான தகவல்
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊடகஅறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த தகவலை ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை
தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அத்துடன், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri