நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள்..

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும் நாளைய தினம் முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri