விரைவில் கூடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பில் நேற்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டு்ள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்கள்
மேலும் கருத்து தெரிவிக்கையில், "நான் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது, இதன் போது என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன்.
கடந்த வருடத்தில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் தோட்ட உட்கட்டமைப்புக்காக ரூ.160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத கனிசமான அளவாகவும். இந்திய அரசின் ஆதரவுடன் கண்டி மற்றும் பதுளையில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்கும் எமக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மலைநாட்டில் சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் மட்டும் 115,000 பேர் பணியாற்றுகின்றனர்.
சம்பள உயர்வு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளார்.
மலையகத்தின் அபிவிருத்தி மற்றும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், பல தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை தொழில் அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன் போது தீர்க்கமான சாதக தன்மை வாய்ந்த பதில் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும்” அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
