தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்
எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு கடற்றொழிலாளர் சங்கம், நேற்றுமுதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
ஏற்கனவே இந்திய அரசாங்கம், சம்பவங்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை இலங்கையிடம் வெளியிட்ட பின்னரும், புதிய சம்பவங்கள் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது மத்திய அரசு ஆதரவளித்து, நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் நேரத்தில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்துவது நியாயமற்றது மற்றும் துரதிஸ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |