ஹரின் பெர்ணான்டோவுக்கு பதில் ஹிருணிக்காவா : வெளியாகியுள்ள தகவல்
நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த மனுஷ நாணயக்காரவின் இடத்துக்கு காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்பிய ஹரின் பெர்னாண்டோவுக்கு (Harin Fernando) பதில் யாரை நிரப்புவது என்பது தொடர்பில் கட்சி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
தேசியப் பட்டியல்
இது அவசரமான விடயமாக உள்ள போதிலும், இது தொடர்பான உள்ளக விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை.

இந்தநிலையில் தேசியப் பட்டியல் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னரே இறுதி செய்யப்படும் என்றும், அதன்படி தற்போதுள்ள பட்டியலில் இருந்தும் அல்லது அதற்கு வெளியில் இருந்தும் வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சிக்கு உள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தநாயக்கவின் கூற்றுப்படி நான்கு பெயர்கள் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan