யாழில் நடராஜா ரவிராஜின் 61 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவ சிலைக்கு முன்பாக இன்றையதினம் மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
உரிமை பிரச்சினைகள்
இதன்போது கருத்து தெரிவித்த க.அருந்தவபாலன்,
குறிப்பாக சாவகச்சேரி தொகுதியிலே மக்கள், பல வாழ்வாதார மற்றும் உரிமை பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
தென்மராட்சி மக்கள் அமரர் ரவிராஜினுடைய பயணத்தை தொடர்ந்து நடத்துவதற்கு இனிவரும் காலங்களில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.











விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam