புதிய பிரதமரின் விடாப்பிடியான கொள்கை! அமைச்சர் நஸீர் அஹமட்
சிறந்த அரசியல் பாரம்பரியம் மற்றும் குடும்பப் பின்னணியுள்ள தினேஷ் குணவர்தன, பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் ஜனநாயக கதவுகள் அகலத்திறக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் நமது நாட்டுக்குத் தேவையான சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி உறுதியாக்கும் நிதானம் மற்றும் மிதவாதச் சிந்தனைகளால் அரசியலில் புடம் போடப்பட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு இவரே பொருத்தமானவர்
| புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு |

இடதுசாரி அரசியலில் தடம் பதித்த பிரதமர் தினேஷ், நாட்டின் முன்னணி வகித்த பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றிய பழுத்த அரசியல்வாதி, சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் அரசியலமைப்புக்கு முரணாகாத வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர்.
இந்தக் கொள்கையுடன்தான் அவர், அமைச்சரவையில் செயலாற்றி வருகிறார். இவ்வாறான ஒருவரின் தலைமையில், அமைச்சராக பணியாற்றக் கிடைத்ததை வரப்பிரசாதமாகவே கருதுகிறேன்.
நாட்டின் முன்னணி அரசியல் வாதியான பிலிப் குணவர்தனவின் புதல்வரான தினேஷிற்கு பிரதமர் பதவி வழங்கியமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் விவேகத்தேயே வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam