செவ்வாய் கிரகத்தின் ஆச்சரிய நிகழ்வை படமெடுத்த நாசாவின் ரோவர்
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் நடந்த ஒரு ஆச்சரிய நிகழ்வை, காணொளி எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபட்டு தொடர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை ஆராயும் போது, நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் நிகழும் ஒரு ஆச்சரியமான வானிலை மாற்றத்தை படம்பிடித்துள்ளது.
Mars dust devil caught in action! This video, which is sped up 20 times, was captured by one of my navigation cameras. ? More on what my team is learning: https://t.co/PhaOYOTrFH pic.twitter.com/vRaAVszcm5
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) September 29, 2023
இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)
நாசா வெளியிட்ட காணொளி
அது ஒரு டஸ்ட் டேவில் நிகழ்வு (Dust devil) என நாசா பெயரிட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 அன்று செவ்வாயின் "தோரோஃபேர் ரிட்ஜ்" வழியாக மணிக்கு சுமார் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் தூசியின் பெரிய சுழல் சுழல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நாசா நேற்று வெளியிட்ட காணொளியில், செவ்வாய் கிரகத்தில் ''டஸ்ட் டேவில்'' நிகழ்வு ஜெஸெரோ பள்ளத்தின் மேற்கு விளிம்பில் நகர்வதைக் காணமுடிகிறது.
விஞ்ஞானிகள் தகவல்
நாசாவால் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட ''டஸ்ட் டேவில்'' நிகழ்வு தோரோஃபேர் ரிட்ஜ் என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
இதன் அகலம் சுமார் 60 மீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் 118 மீட்டர் மட்டுமே நம்மால் பார்க்க முடியும் எனவும் ஆனால் அது வீசும் நிழலின் அடிப்படையில், சுமார் 2 கிலோமீட்டர் உயரம் இருந்திருக்களாம் என விஞ்ஞானிகள் மதிப்பிடுட்டுள்ளனர்.