உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ரணிலின் கருத்தை மறுக்கும் இராஜதந்திரிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்படவில்லை என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் கூறியிருந்தார். எனினும், பிரித்தானிய இராஜதந்திர தரப்புக்கள் தாம் அறிந்த வரையில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.
முன்னதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஸ்கொட்லாந்து யார்டின் உதவி
எவ்வாறாயினும், தங்களுக்குத் தெரிந்தவரை, அத்தகைய முறையான தகவல் எதுவும் வரவில்லை என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்யவும்,
குண்டுவெடிப்புகளில் தலைமறைவான கரங்கள் உள்ளனவா என்பதை கண்டறியவும்
ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் கொழும்பிற்கு விஜயம் செய்த யுஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவரை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பல சர்ச்சைகளை கடந்து குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் எங்கு சென்றுள்ளார் தெரியுமா... போட்டோ இதோ Cineulagam
