மிரிஸ்ஸ கடற்பகுதியில் கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் மீட்பு : விசாரணையில் அம்பலமான கடத்தல் சதி
இலங்கையின் மிரிஸ்ஸ கடற்கரைக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில், சுமார் ரூ. 4 பில்லியன் பெறுமதியான 346 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகை, “அம்பகஹவத்தே சரத் (Ambagahawatte Sarath)” எனப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
டிங்கி படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள்
மேலும், கடலில் இருந்து கரைக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வரும் நடவடிக்கையை ‘தேஹி பாலே’ (Dehi Bale) எனப்படும் மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருங்கிணைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை ஆகியவை இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளன.

டிங்கி படகில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் இரண்டு வேன்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினர் அதிரடியாகச் செயல்பட்டுள்ளனர்.
இதன்போது, டிங்கி படகில் இருந்த மிரிஸ்ஸ மற்றும் பெலியத்த பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வேன்களின் சாரதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 மூட்டைகளை கைப்பற்றல்
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மொத்தம் 17 மூட்டைகளில் இருந்துள்ளன என்றும், அதில் 16 மூட்டைகள் இரண்டு வேன்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மூட்டை டிங்கி படகிலிருந்து மீட்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட வேன்களில் ஒன்றில் விசேடமாக அமைக்கப்பட்ட இரகசியப் பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ ஆகியோர் நேற்று(29.11.2026) பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri