சுனில் வட்டகலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள நாமல்
தன்மீது அவதூறு பரப்பும் விதமாகக் கருத்து வெளியிட்டதாகக் கூறி, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்ட நடவடிக்கைக்கான காரணம்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாட்டில் "போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குப் பின்னால்" நாமல் ராஜபக்ஷ இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாமல் ராஜபக்சவின் சார்பில் சட்டத்தரணி சங்க கருணாரத்ன, பிரதி அமைச்சரிடம் இருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி சட்டக் கடிதம் அனுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சுனில் வட்டகலவின் சார்பில் சட்டத்தரணி மஞ்சுல பாலசூரியா, நாமல் ராஜபக்சவிடம் இருந்து 200 கோடி) ரூபா நஷ்டஈடு கோரி கடந்த 22ஆம் திகதி பதில் அறிவிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.
இந்த பின்னணியில் இந்த அவதூறு குற்றச்சாட்டுகளை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய நாமல் ராஜபக்ஷ, இன்று தாம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
