நாமலின் அரசியல் தொடர்பில் முதல் முதலாக மகிந்தவிடம் மங்கள கொடுத்த அறிவுரை! காலம் கடந்து வெளியாகும் தகவல்
தன்னை அரசியலுக்கு கொண்டு வருமாறு தனது தந்தை மஹிந்த ராஜபக்சவிடம் முதன் முதலில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவே கோரியதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் மங்கள சமரவீர மீதான இரங்கல் விவாதமொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவே என்னை அரசியலுக்கு கொண்டு வருமாறு எனது தந்தையிடம் முதலில் முன்மொழிந்தார்.
அதற்கேற்பவே நான் அரசியலில் பிரவேசித்தேன். இந்த நிலையில் அவரது முயற்சியை நன்றியுடன் நினைவுகூருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மங்கள சமரவீரவின் அரசியல் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அவருடன் நெருக்கமாக செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.