நாமலின் பகிரங்க சவாலின் பின்னணியிலுள்ள இரகசியம் : அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் கல்வித் தகமைகள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டத்தில் கல்வி தகமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajpaksa) சட்ட கல்லூரி பரீட்சை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட முடியாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாமலின் சவால்
நாமல் பரீட்சை எழுதும் போது சட்டக்கல்லூரியில் கடமையாற்றிய பொறுப்பானவர் உயிரிழந்தமையினால் அதனை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தன்மீதான குறற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என நாமல் பகிரங்கமாக தெரிவித்தார் என அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் வசந்த, நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி பரீட்சையில் தோற்றிய விதத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது தனியான அறையொன்றில் இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் பரீட்சை எழுதியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தான் தனியாக சட்டத் தேர்வு எழுதியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவேன். ஆனால் நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் வெளியேற வேண்டும் என அமைச்சருக்கு, நாமல் சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
