ஹோட்டலில் ஏற்பட்ட குழப்பம் - துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அதிகாரி
களுத்துறை சுற்றுலா ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் கொண்ட குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.
ஹோட்டலில் குழப்பம்
பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் உயர் நிர்வாக அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்போது இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
