பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்த இலங்கை! அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து
டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது.

பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை சார்பில் மதுஷங்க 3 விக்கெட்டும், தசுன் ஷானக 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
அரையிறுதிக்கு முன்னேற்றம்
பவன் ரத்நாயக்க அரை சதம் கடந்து 58 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அணித்தலைவர் தசுன் ஷானக கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்து அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனால் பாகிஸ்தான் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்தநிலையில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் 1 பிரிவில் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri