நாமலின் கைது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட தகவல்
"நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப்பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல்
"ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தாமல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும்.

எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. அந்தவகையில், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை.
சட்டத்தை நடைமுறைபடுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்." - என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது