எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்
நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் (04.09.2026)முன்னிலையாகியுள்ளார்.
விசாரணைக்கு செல்வதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பயந்தால், விசாரணைக்கு வரமாட்டோம். என்னை வரச் சொன்னால் நான் எப்போதும் வருவேன்.
ஏனென்றால், அதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இன்று, துரதிஷ்டவசமாக, இந்த நாட்டில் பொலிஸார் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ச வந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த நாட்டின் விவசாயிகளுக்காகவும், நாட்டிற்காகவும், நமது படையின் வெற்றிக்காகவும் ஒரு பெரிய கூட்டம் வரும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

திரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்
நாம் தவறுகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், ஆதாரங்களைத் திரித்தவர் ஜனாதிபதிதான்.
திரித்த ஆதாரம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும். ஆகவே, திரித்த ஆதாரம் என்று சொல்பவர்தான் நாடாளுமன்றத்தில் முடிவைத் தீர்மானிக்கிறார்.
எனவே, நாமல் ராஜபக்சவின் தலைவிதி அந்த 159 பேரால் தீர்மானிக்கப்பட்டால், அந்த 159 பேரின் தலைவர்தான் ஆதாரங்களைத் திரித்தவர் என குறிப்பிட்டுள்ளார்
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri