ரணில் சஜித் இணைவு! வலியுறுத்தும் நாமல்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியையும் ரணில் விக்ரமசிங்கவையும் இணைப்பதற்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அத்துடன், மக்களை பிரித்து அரசியல் செய்யக்கூடாது எனவும் மாறாக வெறுப்பை தவிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வெகுதூரத்தில் இருப்பதாகவும், அரசாங்கம், மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் மற்றும் கரும்பு உற்பத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் ஆனால், அரசாங்கம் உள்ளூர் விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாது உணவை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
