பாதாள உலகக் கும்பலுடன் சிக்கப் போகும் நாமல் - கடும் அச்சத்தில் உதய கம்மன்பில
இலங்கை அரசியலில் கைது விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்சவும் உதய கம்மன்பிலவும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்ற கும்பலுடன் தொடர்புடையவர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் நடவடிக்கை
இந்நிலையில் குற்ற கும்பலுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகள் உட்பட பலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்துள்ளர்.
இந்நிலையில் பாதாள உலக கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி, தன்னை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாமல் பல இடங்களில் புலம்பி வருவதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இனங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டத்தரணி அச்சலா செனவிரட்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அனுதாபத்தை பெற முயற்சி
முறைப்பாட்டின் அடிப்படையில், கம்மன்பில கைது செய்யப்படுவதை தடுக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாமல் ராஜபக்சவும் உதய கம்மன்பிலவும் ஊடகங்கள் முன் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு பொதுமக்களின் அனுதாபத்தை பெற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மறுபுறம் இருவரும் சட்டம் செயல்படுத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.



