ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு சம்பவம் சர்வதேச விதிமீறல்! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரானியக் கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவமானது, சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறும் சட்டவிரோதச் செயலாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026' உலகளாவிய உரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போர்க்கப்பல் தாக்குதல்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விசாகப்பட்டினம் அருகே இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே ஈரானியக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலால் இந்தச் சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் 80 இற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரானியக் கப்பலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையைக் கேட்டுக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை நான் கண்டிக்கின்றேன்.
ஊழல் குற்றச்சாட்டை மறுக்கும் நாமல்
இலங்கை தனது தேசிய நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தியா முதன்மையான பங்கை வகிக்க வேண்டும்.
இதற்காகக் 'கொழும்பு பாதுகாப்பு மகாநாடு' போன்ற பிராந்தியக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் கொந்தளிப்புகளில் வெளிச்சக்திகளின் தலையீடு இருந்தது. அந்த நெருக்கடியுடன் தொடர்புபடுத்தி எனது குடும்பத்தின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நான் அடியோடு மறுக்கின்றேன் என்றார்.
ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam