நாமல் ராஜபக்சவுக்கு பிணை!
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (18.02.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் குற்றப்பத்திரிகை
இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றம் கையளித்துள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதியான நாமல் ராஜபக்சவை பிணையில் செல்ல உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |