77 ஆண்டு கால மரபினை மாற்றிய ஜனாதிபதி அநுர
வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கடந்த 77 ஆண்டுகளாக முதல் பின்பற்றப்பட்டு வந்த மரபினை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றியமைத்துள்ளார்.
இலங்கையில் கடந்த 77 ஆண்டுகளாகவே வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நிதி அமைச்சர்கள் பின்பற்றி வந்த மரபு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக நிதி அமைச்சர்கள் வரவு செலவுத் திட்ட ஆவணங்களை இரகசிய பெட்டி ஒன்றில் போட்டு நாடாளுமன்றிற்கு கொண்டு செல்வது மரபாகும்.
ஆவணப்பெட்டி
எனினும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இம்முறை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆவணப்பெட்டியொன்றில் வரவு செலவுத் திட்ட ஆவணங்களை எடுத்து சென்று, வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 31 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
