செவ்வந்தியின் அலைபேசியை பரிசோதனை செய்ய காத்திருப்போர்: நாமல் வெளியிட்ட தகவல்
செவ்வந்தியின் கையடக்கத் தொலைபேசியை பலர் பரிசோதனை செய்ய காத்திருப்பதாவே தோன்றுவதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுக்கு இப்போது நானே கனவில் தெரிவேன். கனவு கண்டு விழித்த போது 'எனது ராஜபக்ச' 'எனது நாமல்' என்றவாறு தோன்றுகிறதோ தெரியவில்லை.
தேவையானவர்களை பாதுகாக்கும் அரசாங்கம்
அவருக்கு தான் எந்த நாமல் என தெரியும். ஏனென்றால் அவரின் கட்சியிலும் நாமல் கருணாரத்ன இருக்கிறார். ஏன் அவருக்கு அவரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. சாதாரணமாக காதல் கொள்ளும் போதே பெண்கள் தங்கள் காதலனின் பெயரை 'என் உயிர்' என பதிவு செய்வார்கள். அப்படி ஒன்றை அவர் பார்த்தார் என நினைக்கிறேன்.

நாட்டின் பிரஜைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். வெலிகம பிரதேச சபைத் தலைவர் தனது உயிருக்கு ஆபத்து என பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருந்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர் பாதாள குழுத் தலைவரா என்பது வேறு விடயம். அப்போது ஏன் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை பொலிஸார் அழைத்து செல்லும் போது வீதியை மூடுகிறீர்கள்.

அவரின் உயிரை காப்பற்ற வேண்டிய பொறுப்புள்ளது. அரசு தங்களின் செயற்பாடுகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டளர்களை கவனிக்காமல் விட்டுவிட்டு தங்களுக்கு தேவையானவர்களை பாதுகாக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |