லொகு பெடி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரபல போதைப்பொருள் வியாபாரியான லொகு பெடியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், லொகு பெடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசாரிக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, இன்று (24) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சட்டம்
இதன்போது, சிறையில் உள்ள லொகு பெடி மற்றும் பூசாரி ஆகிய சந்தேகநபர்கள், ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இந்நிலையிலேயே, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, போதைப்பொருள் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 54(a)இன் கீழ் இரண்டு சந்தேக நபர்களையும் விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam