நாமலுடன் இணையும் தீர்மானம் தொடர்பில் சஜித் தரப்பு தெரிவித்த கருத்து
நாமலுடன் அதாவது பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செல்வதற்கான எவ்விதமான தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி வேட்பாளர்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.
ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவே அதில் எந்தவித மாற்றமும் இல்லை.அது யாவரும் அறிந்ததே.

அதற்கான எதிர்வாதங்கள் முன்வைக்க தேவையில்லை என நினைக்கிறேன்.ஏனென்றால் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மக்கள் பலம் எமக்கே உள்ளது.
எதிர்க்கட்சி எம்.பிக்களும் அதிகம் எமக்கே இருக்கின்றனர்.எமது கட்சிக்கு அடிமட்டத்தில் பலம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.