வெளியில் வராத ஏதோ ஒரு பெரிய குற்றம்! தான் கைது செய்யப்படப் போகும் திகதியை நன்கு அறிந்துள்ள நாமல்
தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தான் 12ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படுவேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் எமக்குத் தொடர்பில்லை.
பதற்றத்தில் நாமல்
தான் எப்போது கைது செய்யப்படுவேன் என்பது குறித்து நாமல் ராஜபக்சதான் நன்கு அறிந்திருப்பார்.
நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரியாது. அவர் தொடர்பான ஒரு சில குற்றச்செயல்கள் குறித்தே நாம் அறிவோம். அவற்றுள் சில குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ளன.
இந்த வழக்குகளுக்காக அவர் 12ஆம் திகதிக்கு முன்னர் சிறைக்குச் செல்வாரா, அல்லது எமக்கோ, நீதிமன்றத்திற்கோ தெரியாத வேறு ஏதேனும் பாரிய குற்றச்செயல் தொடர்பில் அவர் கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது.
கடந்த கால குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும்போது, நாங்கள் அனைவரும் அறிந்த பல குற்றச்செயல்களைத் தாண்டி, வெளியில் தெரியாத பல குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.
அவை, கடந்த கால குற்றங்களை விட பாரதூரமானதாகவும் இருக்கலாம், அதைவிட சிறியதாகவும் இருக்கலாம். எனவே, அந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தான் அதனுடைய பாரதூரம் தெரியும். எத்தனைக் குற்றங்களை தாங்கள் இழைத்துள்ளோம் என்ற வரையறை அவர்களுக்குத் தெரியும்.
எனவே ஒவ்வொன்றாக தற்போது வெளிவரும் போது அவர்கள் குழப்பமடைகின்றார்கள். இதுதான் தற்போது நாமல் ராஜபக்சவுக்கும் நேர்ந்துள்ளது.
எம்மைவிட, நீதிமன்றத்தை விட அவருடைய குற்றங்கள் நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும். அவர் செய்த குற்றங்களுக்கு சிறைக்குச் செல்வது குறித்து அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்.
12ஆம் திகதிக்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரா தாம் கைது செய்யப்படப் போகிறோம் என்பது குறித்து அரசாங்கத்தை விட நாமல் ராஜபக்ச நன்கு அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்