கைதாகிறார் நாமல்..! ஜேவிபியிடமிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு பறந்த அவசர தகவல் - அம்பலமான விடயம்
நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் நாமல் ராஜபக்ச முன்னிலையான போது, வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்
இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கைது செய்யப்பட்டால், நாங்கள் அநுராதபுரத்திற்கு இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம். அவரைக் கைது செய்யும் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஜனாதிபதிக்கும் இந்த வார இறுதியில் ஒரு கூட்டம் உள்ளது.
ஆனால், மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைக் கட்டியதாகக் கூற வேண்டுமா? அல்லது ரொட்டி மாவு மற்றும் பால் பவுடரின் விலைகளைக் குறைத்ததாகக் கூற வேண்டுமா?
கேலி செய்யும் ஒரு முயற்சி
சொல்வதற்கு எதுவும் இல்லாததால், இது நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைக் கேலி செய்யும் ஒரு முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் நாமல் ராஜபக்சவின் கைதுக்கு பிறகு, கிராம அளவில் பட்டாசுகளை வெடித்தும், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்தியும் கொண்டாட்டங்களுக்குத் தயாராகுமாறு ஜே.வி.பி தனது கட்சி உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..! பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றிற்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்