மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி
பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச போன்று மொட்டுக் கட்சியை வலுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30ஆம் திகதி மொட்டுக் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை தங்காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
