ஜப்பானில் உருவாக்கப்படும் அடுத்த தலைமுறையினருக்கான விமானம்
ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானமானது பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்படவுள்ளதோடு, கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சகம்
இந்த திட்டத்திற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த தலைமுறையினருக்கான குறித்த விமான திட்டத்திற்கு முதல்கட்டமாக 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan