இனவாதத்தை தூண்டிய தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை: ரிஷாட் பதியுதீன்
எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்ட ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நாட்டில் நீதி இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(28.03.2024) எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், படைத்த இறைவனை மிக மோசமான வார்த்தைகளால் கொச்சப்படுத்திய மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தோம்.
அதற்கான தீர்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பாராமுகமாக இருந்து விடாமல் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஞானசாரரின் தீர்ப்பு மதங்களை இழிவுபடுத்தும் சகலருக்கும் படிப்பினை: முஸ்லிம் தரப்புக்கள் பாராட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
