நாமலின் பாரிய மோசடியில் சிக்கிய மற்றுமொரு பெண்! பயமின்றி காட்டிக்கொடுத்த முக்கிய புள்ளிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் உள்ளதால், சாட்சியமளிக்கும் பணி வேகமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சாட்சிகள் பயமின்றி நீண்ட வாக்குமூலங்களை அளித்து வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிணை நிராகரிப்பு
இந்த வழக்கின் சந்தேக நபர்களான நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிரிவர்தன ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வழக்கு விசாரணையின் போது நாமல் ராஜபக்ச சார்பாக முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கை மீதான உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரம வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
பிணை மனுவில் முன்வைக்கப்பட்ட காரணங்களை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் தகவல்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு பெண் சந்தேகநபர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவித்தது.
சிக்கிய மற்றுமொரு பெண்
கிரிஷ் டிரான்ஸ்வேர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராக அவரும் பணியாற்றியுள்ளார்.

வங்கி அறிக்கைகளின் மூலம், 70 மில்லியன் ரூபாய் கொடுக்கல் வாங்கலில் அவர் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இதற்கு முன்னர் தெரிவிக்காத விடயங்களை தப்போது கூற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக இரண்டு சாட்சிகள் இதற்கு முன்னர் முக்கியமான தகவல்களை முன்வைக்காத போதிலும், தற்போது சந்தேகநபர்கள் சிறையில் உள்ளதால் நீண்ட வாக்குமூலங்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சாட்சியாளர்கள் சில ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இந்த விசாரணைகள் எப்போது முடிவடையும். இது ஒரு அரசியல் தேவையாக மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
you may like this video
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam