கட்டுநாயக்க விமான நிலையத்தில் தப்பிய நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று காலை மாலைதீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் விமான நிலையத்தை விட்டு எந்த தடையும் இல்லாமல் வெளியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகளுக்கோ அல்லது பொலிஸாருக்கோ நாமலை கைது செய்வதற்கான உரிய பிடியாணை கிடைக்காமயே இதற்கு காரணமாகும்.
பிடியாணை
நேற்று காலை 11.30 மணிக்கு மாலைதீவின் மாலேயிலிருந்து வந்த இலங்கை எயார்லைன்ஸின் UL-102 விமானத்தில் அவர் வந்திருந்தார்.
நாமல் ராஜபக்சவின் வருகையை எதிர்பார்த்து பல வழக்கறிஞர்களும் அவரது ஆதரவாளர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றில் நாமல் ராஜபக்ச முன்னிலையாக தவறியமைக்காக அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
